"எந்த அணையும் கட்டாத ஈ.பி.எஸ்."-"நிதானம் தவறி பேசுகிறார்"-அமைச்சர் துரைமுருகன் கடும் தாக்கு
"எந்த அணையும் கட்டாத ஈ.பி.எஸ்."-"நிதானம் தவறி பேசுகிறார்"-அமைச்சர் துரைமுருகன் கடும் தாக்கு
அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.எஸ் நிதானம் தவறி பேசுவதாக அமைச்சர் துரைமுருகன் விமர்சித்து உள்ளார்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு முயற்சிப்பதாகவும், அதனை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆந்திராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வெளியான செய்தியைப் பார்த்து ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளதாகவும், இப்படித்தான் முன்னர் கணேசபுரத்தில் அணை கட்டப்போவதாக வந்த தகவலைப் பார்த்து சிலர் அறிக்கை விட்டதாகவும், ஆனால் அங்கு அணை கட்டப்படவில்லை என்றும் கூறி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றும், எந்த அணையையும் கட்டாத ஈபிஎஸ்-க்கு, நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் தெரிந்திருக்க நியாயம் இல்லை என்றும் அமைச்சர் துரைமுருகன் விமர்சித்து உள்ளார்.