ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே செல்லமாக சண்டையிட்டு கொண்டன. சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள், சாலையின் நடுவே செல்லமாக அன்புடன் தனது தும்பிக்கையால் சண்டையிட்டபடி நின்றன. சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றன. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்....