"கனமழையில் மூழ்கிய விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Update: 2022-11-14 03:00 GMT

"கனமழையில் மூழ்கிய விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

தமிழகத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நெல்லுடன், வாழை, நிலக்கடலை மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பயிர்க்காப்பீட்டுக்கான கால அவகாசத்தை இம்மாத இறுதிவரை நீட்டிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்