கனமழையால் உயர்ந்து கொண்டே போகும் வைகை அணையின் நீர் மட்டம்.. மக்களுக்கு கடும் எச்சரிக்கை..!

Update: 2022-12-15 02:20 GMT

வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததன் காரணமாக, அணைக்கான நீர்வரத்து 3 ஆயிரத்து 368 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது.

இதனையடுத்து வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு, முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும் தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், வைகை அணை விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்