சென்னை உயர்நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகள் - குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு
- சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
- சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோரை நியமித்து, கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
- இந்நிலையில், இந்த ஐந்து பேரையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க அண்மையில் கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.
- இதனை ஏற்றுக்கொண்டு ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
- சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ஐந்து பேருக்கும் பதவி பிரமானம் செய்து வைக்கவுள்ளார்