டாக்டர் கட்டு விரியன் கடிச்சிருச்சி.!! பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி..

Update: 2022-08-01 03:22 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தன்னை கடித்த பாம்புடன் விவசாயி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓலப்பாளையத்தை சேர்ந்த பழனி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவரை கட்டு விரியன் பாம்பு கடித்துள்ளது. இதில், வலியால் துடித்த அவர் அந்த பாம்பை அடித்து கொன்றுள்ளார். பின்னர், பாம்புடன் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்ற பழனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்