'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவினருக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து, அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு "தனியே வெளியே வர வேண்டாம்" என மிரட்டல் விடுக்கும் வகையில் குறுஞ்செய்தி ஒன்று வந்ததாக படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து எழுத்துப்பூர்வ புகார் அளிக்காத நிலையிலும், படக்குழுவினருக்கான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்துள்ளனர்.