"எதுக்குங்க எங்கள பேச விடுறீங்க".. திமுக கூட்டத்தில் பெண் பிரதிநிதி ஆவேசம் - புதுக்கோட்டையில் பரபரப்பு

Update: 2023-03-16 05:01 GMT
  • புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் மகளிருக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதில்லை என மகளிர் அணியைச் சேர்ந்தவர் கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
  • கந்தர்வகோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • அதில் பேசிய மகளிர் அணியைச் சேர்ந்த தவமணி என்பவர், மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவமும் அங்கீகாரமும் அளிக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி பேசினார்.
  • இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதற்கு இனிமேல் அதுபோன்று நடைபெறாது என்று ஒன்றிய செயலாளர் பரமசிவம் பதில் அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்