"2 நாளுக்கு முன் நண்பரிடம் புலம்பிய டி.ஐ.ஜி" - மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோவை மாநகர போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி, மன அழுத்தத்தில் இருப்பது குறித்து அறிந்த மேற்கு மண்டல ஐஜி சுதாகர்,
கடந்த 3 நாட்களுக்கு முன்பு டி.ஐ.ஜியையும், அவரது மனைவியையும் அழைத்து ஐஜி அலுவலகத்தில் 2 மணி நேரம் பேசியுள்ளார்.
அப்போது, மன அழுத்தம் குறித்து கேட்டறிந்த அவர்,
அதிலிருந்து மீள்வது குறித்து சில வழிமுறைகளை தெரிவித்து கவுன்சிலிங் கொடுத்துள்ளார்.
இதேபோல், கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனும் டி.ஐ.ஜி-யிடம் பேசியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஓசிடி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டி.ஐ.ஜி,
ஒரே மருத்துவரை பார்க்காமல், மாற்றி மாற்றி பார்த்து மருந்து எடுத்து வந்துள்ளார்.
அது தொடர்பாக இணையதளத்தில் நிறைய குறிப்புகள் எடுத்து ஆயுர்வேத மருந்துகளை எடுத்துள்ளார்.
அவருடைய மகள் மெடிக்கல் படிப்பதற்கு தயார் செய்துவிட்டதாகவும் சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
2 நாளுக்கு, முன்பே தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாக,
காவல் துறையில் இல்லாத நண்பரிடம் தெரிவித்துள்ளார்.
அவரும், டி.ஐ.ஜியும் ஆனைகட்டிக்கு போவதாக திட்டமிடப்பட்டு,
நண்பர் வரவில்லை என்பதால் போக முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் இரவே, அதாவது பிறந்தநாள் விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோதே,
தனது தனிப்பாதுகாவலரிடம் துப்பாக்கியை எங்கே வைப்பீங்க, பத்திரமாக இருக்கிறதா என கேட்டு பார்த்து, இடத்தை சென்று பார்த்துள்ளார்.
மறுநாள் காலையில் அங்கு சென்று துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை டி.ஐ.ஜி தற்கொலை - புதிய தகவல்கள்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கோவை மாநகர போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல்
டி.ஐ.ஜி மன அழுத்தத்தில் இருப்பது குறித்து அறிந்த மேற்கு மண்டல ஐஜி சுதாகர்
கடந்த 3 நாட்களுக்கு முன்பு டி.ஐ.ஜியையும், அவரது மனைவியையும் அழைத்து 2 மணி நேரம் பேசியுள்ளார்
அப்போது மன அழுத்தம் குறித்து கேட்டறிந்தார்
அதிலிருந்து மீள்வது குறித்து சில வழிமுறைகளை தெரிவித்து கவுன்சிலிங் கொடுத்துள்ளார்
கோவை மாவட்ட எஸ்.பி. பத்றையில் இல்லாத நண்பரிடம் அதுகுறித்து தெரிவித்துள்ளார்
நண்பரும், டி.ஐ.ஜியும் ஆனைகட்டிக்கு போவதாக திட்டமிடப்பட்டது
நண்பர் வரவில்லை என்பதால் போக முடியவில்லை என தகவல்
தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் இரவு, பிறந்தநாள் விழா ஒன்றில் பங்கேற்று திரும்பினார்
தனிப்பாதுகாவலரிடம் துப்பாக்கியை எங்கே வைப்பீங்க, பத்திரமாக இருக்கிறதா? என கேட்டு பார்த்துள்ளார்"DIG who lamented to friend 2 days ago" - Shocking news on death
மறுநாள் காலையில் துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டு தற்கொலை செய்ததாக தகவல்