தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் ஏராளமான தர்பூசணி பழங்கள் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதிகமானோர் வாங்கி செல்வதால் முக்கால் விளைச்சல் இருக்கும் பழங்களை கொண்டு வந்து அவற்றை உடனடியாக பழுக்க வைக்கவும் சிவப்பு நிறம் அதிகமாக ஏற்றவும் ரசாயன ஊசிகள் போடப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சோதனை செய்து பார்த்ததில்,
ரசாயன ஊசி செலுத்தப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து நகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை பிரிக்கும் இடத்தில் வைத்து அழித்தனர்.