பீகாரில் சத்யகிரகா விரைவு ரயிலில் இருந்து 5 பெட்டிகள் தனியாக பிரிந்து சென்றதால், நடுவழியில் பயணிகள் தவித்தனர். பெட்டையா மஜாலியா ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் சென்று கொண்டிருந்தபோது, 5 பெட்டிகளின் இணைப்பு துண்டானது. இதனால், எஞ்சினுடன் இருந்த பெட்டிகள் மட்டும் முன்னோக்கி சென்றதால், பயணிகள் அலறினர். இதையடுத்து, ரயில் ஓட்டுநருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது. நடுவழியில் ரயில் பெட்டிகள் தனியாக பிரிந்து நின்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தகவலறிந்து சென்ற ரயில்வே துறையினர் ரயில் பெட்டிகளை இணைத்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.