ஜிம் உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு - கொலையாளிக்கு போலீசார் வலை

Update: 2022-12-31 13:27 GMT

டெல்லியில் ஜிம் உ ரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரீத் விஹார் பகுதியில் இருக்கும் உடற்பயிற்சி நிலையத்தில், ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் மஹிந்தர் என்பவர், அவர் உடற்பயிற்சி நிலையத்தின் உரிமையாளராக இருந்ததும் தெரிய வந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்