டெல்லி மகளிர் ஆணைய தலைவருக்கு பாலியல் சீண்டல்
டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்
நேற்று அதிகாலை டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு குடி போதையில் இருந்த கார் ஓட்டுனர் ஒருவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவரை பிடிக்க முயன்ற போது கார் கண்ணாடியில் தனது கையை அமுக்கி சில அடிதூரம் இழுத்துச் சென்றதாகவும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மகளிர் ஆணைய தலைவருக்கே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், அது தலைநகரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள டெல்லி போலீசார் அத்துமீறலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் ஹரிஷ் சந்திராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஸ்வாதி மாலிவால் ஒரு நடைபாதையில் நின்றுகொண்டிருந்த நிலையில், அதே இடத்தில் அவரது குழுவினர் அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது