டெல்லி சிறுமி கொலையின் பின்னணி.. Lovers-க்குள் ENTRY கொடுத்த EX. - பிறந்தநாள் வரை காத்திருந்த காதலன்

Update: 2023-05-30 12:00 GMT

டெல்லியில் 16 வயது சிறுமியை சாஹிலின் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹரில் தலைமறைவாகியிருந்த சாஹிலினை, கைது செய்த போலீசார் , தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை சாஹலின் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென சாஹலினுடன் பழகுவதை சிறுமி நிறுத்தியதாக தெரிகிறது. இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், சிறுமி அவருடைய முன்னாள் காதலனுடன் மீண்டும் பழகி வருவதை அறிந்து சாஹலின் ஆத்திரமடைந்துள்ளார். இந்நிலையில், தனது பிறந்தாளன்று நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கிளம்பிய சிறுமியை, சாஹலின் கத்தியால் உடலில் பல இடங்களில் குத்தியும், தலையில் கல்லை போட்டும் கொன்றதும் தெரியவர, சாஹலினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்