விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் - உறவினர்கள் சாலை மறியல் - பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட உடல்

Update: 2022-09-17 07:20 GMT

விருந்துநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், கடந்த 14 ஆம் தேதி பொதுமக்களால் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட தங்கப்பாண்டியன், மனநல காப்பகத்தில் இருந்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்தார். தங்கப்பாண்டியனை போலீசார் அடித்து கொன்று விட்டதாக கூறி, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கடந்த இரு நாட்களாக தங்கப்பாண்டியனின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி மற்றும் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து தங்கப்பாண்டியனின் உடல், பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்