சிதம்பரத்தில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

Update: 2022-11-14 03:39 GMT

சிதம்பரம் அருகே கனமழையால் வயல்களில் நெற்பயிர்கள் மூழ்கிவிட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அங்குள்ள இளநாங்கூர், கூத்தங்கோயில், சாலியந்தோப்பு, செட்டிமேடு ஆகிய கிராமங்களில், சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.

தண்ணீர் வடிய நீண்ட நாளாகும் என்பதால், அதற்குள் பயிர்கள் அழுகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேற போதிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும், உரிய நிவாரணம் உதவி மற்றும் காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்