சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதாகும் துரைசாமி என்பவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி துரைசாமி உயிரிழந்தார். சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.