கபடி போட்டியில் தகராறு | இரு தரப்பாக மோதிக்கொண்ட திமுகவினர் | தாம்பரத்தில் பரபரப்பு | TAMBARAM

Update: 2022-12-18 10:26 GMT

தாம்பரத்தில் கபடி போட்டி நடத்துவதில் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன் தலைமையில் தாம்பரத்தில் கபடி போட்டி நடத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடு நடைபெற்றது. இந்நிலையில், கபடி போட்டி நடத்த திமுகவில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த‌தால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், கபடி போட்டி நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற கபடி போட்டிகள் முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் பரிசுகளை வழங்கினார்

Tags:    

மேலும் செய்திகள்