"குஜராத் கலவரத்திற்கு மோடி காரணமா?" - பாக். வம்சாவளி எம்பி கேள்விக்கு பிரிட்டன் பிரதமர் பதிலடி

Update: 2023-01-20 03:08 GMT

குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்பட சர்ச்சையில், பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரம் குறித்து, லண்டன் பிபிசி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

அதில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது, இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என குறிப்பிடப்பட்டது.

இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி. இம்ரான் ஹூசைன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ரிஷி சுனக், பிரதமர் மோடியை ஜென்டில் மேன் எனவும், ஒரு ஜென்டில்மேன் பற்றி கூறப்படும் எல்லா கருத்துக்களுக்கும் தான் உடன்பட முடியாது எனவும் பதிலளித்து, பிரதமர் மோடிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்