இந்திய அரசமைப்பை விட மிக மிக பழமையானது பாரத் என, தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
கிண்டியில் இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அடுத்த 25 ஆண்டுகளில் 100 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில் நமக்கான இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் அடைய வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்தையும் உள்ளடக்கிய ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை நோக்கியதே நம் பயணம் என்றும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.