வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி. புகைப்படம் - கேரள பாஜக தலைவர் கடும் கண்டனம்

Update: 2023-04-27 06:27 GMT

கேரளாவில், வந்தே பாரத் ரயிலில், பாலக்காடு காங்கிரஸ் எம்.பி. புகைப்படங்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கேரளா சென்ற பிரதமர் மோடி, அங்கு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்நிலையில், வந்தே பாரத் ரயில் ஷோரனூர் ரயில் நிலையம் வந்த போது, பாலக்காடு காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீகண்டன் புகைப்படத்தை அவரது ஆதரவாளர்கள், ஜன்னல் கண்ணாடிகள் முழுவதும் ஒட்டினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்