மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு சலுகைகள்! ஆராய்ந்து முடிவெடுக்க 3 நபர் ஆணையம் அமைப்பு

Update: 2022-10-08 13:27 GMT

மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு சலுகைகள்! ஆராய்ந்து முடிவெடுக்க 3 நபர் ஆணையம் அமைப்பு

பிற மதங்களுக்கு மாற்றப்பட்ட பட்டியலின மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய 3 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

மதம் மாறிய பட்டியலின கிறிஸ்தவர்களும், பட்டியலின முஸ்லிம்களும் தங்களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், சீக்கிய மதம் அல்லது பௌத்தம் தவிர வேறு மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. ,

முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் பேராசிரியர் சுஷ்மா யாதவ் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவீந்தர் குமார் ஜெயின் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆணையம், 2 வருடங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு கால நிர்ணயமும் செய்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்