இவர்களும் மனிதர்கள் தான்... நரிக்குறவர்களிடம் கட்டாய வசூல்... கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

Update: 2022-12-04 10:37 GMT

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், தற்போது சபரிமலை சீசன் களைகட்டி உள்ளது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன வியாபாரிகள், கடற்கரை சாலை பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் அமர்ந்து, பாசி மாலைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே, சீசன் வாகன பார்க்கிங் கட்டண உரிமை ஏலம் எடுத்த ஒரு கும்பல், நரிக்குறவர் இன வியாபாரிகளிடம் பண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். பணம் கொடுக்க மறுக்கும் நரிக்குறவர் வியாபாரிகளிடம் தகராறில் ஈடுபடும் இக்கும்பல் அவர்களின் பொருட்களையும் எடுத்து செல்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார்கள் அளித்தும், பேரூராட்சி அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வியாபாரிகள் வேதனை அடைகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்