புதுக்கோட்டையில் வரும் 28ஆம் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெறுவதை ஒட்டி புத்தகங்களை வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் 2 ஆயித்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி உள்ள மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், நூலகங்களில் இன்று "புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற தலைப்பில் ஆட்சியர் தலைமையில் புத்தகங்களை வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரசு ராணியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மெர்சி ரம்யா மாணவிகளோடு தரையில் அமர்ந்து புத்தகத்தை வாசித்து மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். ஆட்சியரின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.