நிலுவை வழக்குகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் நவீன முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர், வருவாய் துறையால் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் மற்றும் வாரிசு சான்றிதழை அடுத்த மாதத்திற்குள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவற்றின் விவரங்கள் குறித்து தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் பட்டா மாறுதலில் தாமதங்கள் இருப்பதாவும்,பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி இந்த சேவை வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.