ஆண்டு கடைசியில் வழக்கம் போல உலகத்தையே அலறவிட்டு கமுக்கமான சீனா... கடுப்பில் அமெரிக்கா.. கவலையில் WHO
சீனாவில் அதிவேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனா பரவல் குறித்த தகவல்களைப் பகிர சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென், கொரோனா விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும், அமெரிக்க கொரோனா தடுப்பூசிகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சீனா உட்பட அனைத்து நாடுகளும், மக்களுக்கு தடுப்பூசி போடுவது, பரிசோதனை மற்றும் சிகிச்சையை கிடைக்கச் செய்வது மற்றும் கொரோனா விவரங்கள் குறித்த தகவல்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்...