புது வித Challenge -ஆல் மருத்துவமனையில் குவிந்த குழந்தைகள்
one chip challenge செய்த பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. இந்த சவால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி ஒரே ஒரு டார்டில்லா சிப்ஸை உலகின் மிக காரமான மிளகாய் மற்றும் மிளகாய் பொடியுடன் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று கூறப்படும் நிலையில், அமெரிக்காவின் க்லோவிஸ் நகரில் உள்ள பள்ளிகளில் கடந்த வாரத்தில் மட்டும் இந்த சவாலை செய்த 20 முதல் 30 குழந்தைகள் வயிற்றுப் போக்கு, கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த சவாலுக்கு தடை விதிக்கப்படா விட்டாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளுமாறு அம்மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது