கையில் குழந்தை..வயிற்றில் ஒரு உயிர்..யோசிக்காமல் பெண் செய்த பகீர் காரியம் - அதிர்ச்சியில் கணவன்

Update: 2023-07-15 06:36 GMT

கேரளாவில் பச்சிளம் குழந்தையோடு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்த கர்ப்பிணி தாய் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மாயமான குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரளாவின் வயநாடு அருகே வெண்ணியோடு பகுதியை சேர்ந்தவர் தர்ஷனா. இவருக்கு ஓம் பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி குழந்தை ஒன்று உள்ள நிலையில், நான்கு மாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில், தனது பச்சிளம் குழந்தையுடன் பாரத்திக்கல் பகுதியில் உள்ள ஆற்றில் தர்ஷனா குதித்து தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, அப்பகுதியில் இருந்த மக்கள், ஆற்றினுள் குதித்து கர்ப்பிணி பெண்ணை மீட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தர்ஷனாவை பரிசோதனை செய்தபோது, அவர் விஷமறிந்து ஆற்றில் குதித்தது தெரியவர, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஆற்றில் மாயமான பச்சிளம் குழந்தையை போலீசார் தேடி வரும் நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்