"முதல்வர் பதவி லிங்காயத்துக்கே.." - வீர சைவ மகாசபை அதிரடி..! நெருக்கடியில் காங்கிரஸ்...
லிங்காயத் வகுப்பை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமென, காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து இந்திய வீர சைவ மகாசபை கடிதம் எழுதியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட லிங்காயத் வகுப்பினர், 34 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் லிங்காய வகுப்பை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகமாக உள்ளனர். ஏற்கனவே 9 இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்களில் 5 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டுமென சுன்னத் உல்மா வக்பு வாரியம் வலியுறுத்தியுள்ள நிலையில், லிங்காயத் வகுப்பை சேர்ந்தவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க கோரிக்கை விடுத்துள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.