அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்..மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்
முதற்கட்டமாக ஆயிரத்து 545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அந்த பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5 ஆயிரத்து 941 பேர், 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37 ஆயிரத்து 740 மாணவ, மாணவியர்கள், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17 ஆயிரத்து 427 பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.
இதற்காக தமிழக அரசு ஏற்கனவே 33 புள்ளி 56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தினசரி உணவு பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் அரிசி, ரவா, சேமியா, கோதுமை உப்புமா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
மேலும், வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.