இன்று விழுப்புரம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்

Update: 2023-04-26 03:14 GMT

மூன்று மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு செய்ய, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விழுப்புரம் செல்கிறார்.தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள், அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதா, என ஆய்வு மேற்கொள்ளும் வகையில், முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொள்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடுகிறார். இதையடுத்து, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். இதன் தொடர்ச்சியாக, நாளை காலை 9:30 மணியளவில், மூன்று மாவட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்