"நெருக்கடிக்கு அஞ்சியே திரும்ப பெற்றுள்ளார் முதல்வர்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு
தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்த முதல்வரே, அதனை நிறுத்தி விட்டு துணிச்சல் என பெருமையாக பேசுவதா? என்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். சேலம் தாதகாப்பட்டி பகுதியில் மே தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடும் நெருக்கடிக்கு பயந்தே, சட்டத்தை முதல்வர் திரும்பப் பெற்றுள்ளதாக கூறினார்.