"வேலைக்கு போக சொல்லி மனைவி திட்டியதால் ஆத்திரம்"- ஆத்திரத்தில் ரயில் முன் பாய்ந்த கணவன்...

Update: 2023-02-15 02:19 GMT
  • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மதுபோதையில் மனைவியுடன் நடந்த தகராறில் விரக்தி அடைந்த கணவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த ஆண்டனி ஜோசப் ராஜ் - ரூபி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
  • ஆண்டனி ஜோசப் ராஜ் வேலைக்கு செல்லாமல், மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
  • இதனால், வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
  • இந்த நிலையில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஆண்டனி ஜோசப் ராஜ், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
  • பின்னர் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், சிதம்பரம் இருப்பு பாதை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கிள்ளை ரயில் நிலையத்திற்கு அருகில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
  • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்