- சிதம்பரம் அண்ணாமலை நகரில், உணவகம், இரண்டு டீக்கடைகளை சேதப்படுத்தியது தொடர்பாக, பாமக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
- அண்ணாமலை நகரில் இயங்கி வரும் உணவகம், இரண்டு டீக்கடைகளை பாமக நகர அமைப்பு செயலாளர் அருண்குமார் உள்பட மூவர் அடித்து சேதப்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- இது குறித்த புகாரின் பேரில், அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அண்ணாமலை நகர் போலீசார், அருண்குமாரை கைது செய்தனர்.
- மேலும், தலைமறைவாக உள்ள பாமக நிர்வாகிகள் இருவரை தேடி வருகின்றனர்.