8 நாட்களாகியும் விலகாத 'சென்னை' மர்மம்.. தலையை பிய்த்து கொள்ளும் போலீஸ் - 9 கிலோ எங்கே போனது?
- சென்னையில் ஒன்பது கிலோ த ங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
- சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் கடந்த 9ஆம் தேதி, ஷட்டரை உடைத்து 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் வைர நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
- இதுதொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆனால், இதுவரை கொள்ளையடித்துச் சென்ற கார் குறித்தும், கொள்ளையர்கள் குறித்தும் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்
- . திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஆறு நாட்களுக்குள் அரியானா சென்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ள நிலையில், 8 நாட்களாகியும் சென்னையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை