கடன் கேட்டு சென்றவரிடமே கோடிக்கணக்கில் பணத்தை அமுக்கிய பலே கில்லாடிகள்.. அலேக்கா தூக்கிய சென்னை போலீஸ்
- சென்னையில் 100 கோடி ரூபாய் கடன் தருவதாகக் கூறி, 4 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
- மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஷியாமல் சட்டர்ஜி என்பவர், தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இயங்கி வந்த ஈஸ்ட் கோஸ்ட் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார்.
- அவருக்கு 100 கோடி ரூபாய் கடன் தருவதாக உறுதி அளித்த அந்த நிறுவனத்தினர், முன் வைப்புத்தொகையாக 4 கோடி ரூபாய் கேட்டுள்ளனர். அதை நம்பிய ஷியாமல் சட்டர்ஜி, 4 கோடி ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
- ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் தலைமறைவானதால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஷியாமல் சட்டர்ஜி புகார் கொடுத்தார்.
- இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
- இந்நிலையில், சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள சொகுசு விடுதியில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம், இம்தியாஸ் அகமது என்கிற சதீஷ்குமார், பவன்குமார் என்கிற ரவி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
- ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.