சென்னை-ஜப்பான் விமான சேவை..அமைச்சர் வி.கே.சிங் சொன்ன தகவல் | Minister VK Singh | India
சென்னையில் இருந்து ஜப்பானுக்கு நேரடி விமான சேவை தொடங்குவது என்பது, விமான நிறுவனங்களின் வர்த்தக ரீதியிலான முடிவு என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என் ராஜேஷ்குமார், தமிழக முதல்வரின் கடிதம் மத்திய அரசுக்கு கிடைத்ததா எனவும், சென்னை-ஜப்பான் நேரடி விமான சேவையை தொடங்க, மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் விமான சேவையை தொடங்குவது என்பது, அந்த வழித்தடத்தில் பொருளாதார சாத்திய கூறுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரணிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, விமான நிறுவனங்களின் வர்த்தக ரீதியிலான முடிவு என கூறினார்..