சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது...
இந்த பட்டியலின்படி, நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐ.ஐ.டி., தொடந்து 5வது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த பொறியியல் கல்வி நிறுவனம் என்ற பிரிவிலும் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறது. அதேபோல, சிறந்த கல்லூரிகள் பிரிவில் சென்னை மாநிலக் கல்லூரி 2ம் இடத்திலும், லயோலா கல்லூரி 7ம் இடத்திலும் உள்ளன. சிறந்த பல்கலைக்கழகம் என்ற பிரிவில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் முதலிடத்தையும், டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், ஜாமியா பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. இதேபோன்று, சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனம் என்ற பிரிவில், அகமதாபாத் ஐ.ஐ.எம். முதலிடத்திலும், பெங்களூரு ஐ.ஐ.எம். இரண்டாம் இடத்திலும், கோழிக்கோடு ஐ.ஐ.எம். மூன்றாவது இடத்திலும் உள்ளன. மேலும், அம்ரித்தா பல்கலைக்கழகம், வேலூர் வி.ஐ.டி, திருச்சி என்.ஐ.எம். கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களும் கவனிக்க தக்க இடத்தை கைப்பற்றி, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளன.