இந்தியாவில் சீறி பாய போகும் 12 தென் ஆப்பிரிக்க சீட்டாக்கள்

Update: 2023-01-28 02:35 GMT

விரைவில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சீட்டாக்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவில் அழிந்துப்போன சீட்டாக்களை அறிமுகம் செய்யும் திட்டமாக ஆப்பிரிக்காவில் இருந்து சீட்டாக்கள் கொண்டுவரப்படுகிறது.

கடந்த ஆண்டு நமிபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சீட்டாக்கள் மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது.

இதுபோன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்தும் 12 சீட்டாக்கள் கொண்டுவரப்படுகிறது.

இதற்கான இருதரப்பு ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி சீட்டாக்கள் பிப்ரவரி மத்தியில் வர வாய்ப்பு உள்ளதாக இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

தென் ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு நன்கொடையாக சீட்டாக்களை வழங்குகிறது எனவும் இந்தியா சீட்டாக்களை பிடித்து அனுப்ப ஒரு சீட்டாவுக்கு 2 லட்சத்து 45 ரூபாயை வழங்குகிறது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்