'கடமையின் உச்சிக்கு சென்ற கால்வாய் பணி' கதவுகளை மறைத்து கட்டப்பட்ட கால்வாய்.. வாசல் திறக்க முடியாமல் மக்கள் கடும் அவதி!
நெல்லையில் வீடு மற்றும் கடைகளின் கதவை மறைத்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமசுந்தரத்திடம் கேட்கலாம்...
திருநெல்வேலி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் போடப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை எழுந்துள்ளது. கழிவு நீர் ஊளையின் பக்கவாட்டுச் சுவர் இரண்டடி முதல் மூன்று அடி உயிரை உயரமாக இருப்பதால் வீட்டின் கதவை கூடத் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது