"அரசு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை" - அமைச்சர் திட்டவட்டம்
- அரசு கேபிள் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என, அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
- தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது.
- இதில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், மக்களிடமிருந்து பணத்தை சுரண்டுவதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்திருப்பதாக, விமர்சித்தார்.