கேரளாவில், சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட எருமை மாடு ஒன்று வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம், மங்கடா பகுதியில் அப்பாஸ் என்பவர் ஜாபராபாத் என்ற வகையிலான எருமை மாட்டினை வளர்த்து வருகிறார். தனது மகனுக்காக 7 மாத கன்றாக இதனை வாங்கிய போது, சுமார் 55 கிலோவில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இதன் எடை ஆயிரம் கிலோவாக உள்ளது. கட்டப்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எருமை மீது, அக்கம்பக்கத்தில் வசிக்கும் சிறுவர்கள் சவாரி செய்கின்றனர்.