ஆஷஸ் டெஸ்ட் போட்டி-பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி - தோல்வியிலிருந்து காப்பாற்றிய ப்ரூக்ஸ்
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி, ஹெட்டிங்கி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி வீரர் மிட்செல் மார்ஷ் சதமடித்தார். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 251 ரன்கள் இலக்கோடு 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்ததால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி கட்டத்தில் நிலைத்து நின்று ஆடிய ஹாரி ப்ரூக், 75 ரன்களில் வெளியேறியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏகிறியது. இருப்பினும், மார்க் வுட்டும், வோக்ஸூம் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர். வோக்ஸ் 32 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.