பிரிட்டன் ராணி மறைவு - புத்தகத்தில் கையெழுத்திட்டு ஜோ பைடன் அஞ்சலி

Update: 2022-09-09 03:18 GMT

இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டனர். வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவின் பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வந்தடைந்த இருவரும், அங்கு வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டனர். பிரிட்டிஷ் அரசியின் மறைவை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரிட்டிஷ் தூதரகத்தில் உள்ள அந்நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்