சிறுவன் மரணம் - நீதி கேட்டு அமைதி பேரணி

Update: 2022-09-09 07:47 GMT

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை, உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

ஆன் லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற கடந்த 2021, ஆகஸ்டு 3-ஆம் தேதி கூறிய தீர்ப்பில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, சட்டத்தை ரத்து செய்தது.

மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்