உடல் உறுப்பு தானம் விவகாரம்..."கோட்டாட்சியரின் சான்று தேவையில்லை" .."தென்காசி கோட்டாட்சியர்"
உடல் உறுப்பு தானம் செய்ய கோட்டாட்சியரின் சான்று தேவையில்லை என்றும், வட்டாட்சியரின் சான்றை வைத்தே அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் உடல் உறுப்பு தானம் செய்வது தொடர்பான மனுக்கள், கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரிடம் கையெழுத்து பெற்ற பிறகு, கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தன. மனுவில் கையெழுத்து பெற வந்திருந்த 2 குடும்பத்தினர் வெகுநேரம் காத்திருந்து விட்டு திரும்பிச் சென்றனர். இந்நிலையில், அவர்களை தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா அலுவலகத்துக்கு வரவழைத்து, ஆவணங்களை சரிபார்த்து, கையெழுத்திட்டு அவர்களிடம் வழங்கினார். அப்போது, உறுப்பு தானம் தொடர்பான மனுக்களில் வட்டாட்சியர் கொடுக்கும் சான்றை வைத்தே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும், கோட்டாட்சியரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கூறினார். இனி வரும் காலங்களில் வட்டாட்சியர் அளிக்கும் சான்றிதழை மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.