"செங்கோலை வைத்து நாடக அரசியல் செய்கிறது பாஜக.." - திருமாவளவன் குற்றச்சாட்டு
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து மத்திய பாஜக அரசு நாடக அரசியல் செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா மற்றும் 'விடுதலை' 89-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திராவிட அரசியல் அடையாளத்தை அழிக்க முடியாது என்றும், குப்புற விழுந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் பதிக்க முடியாது என்றும் கூறினார்