ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்களுக்கான அழகு நிலையங்களை மூட தலிபான் அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெண் அழகு நிலையங்களுக்கான உரிமத்தை அரசு ரத்து செய்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.