"அறக்கட்டளை நிலங்களை ஏழைகளுக்கே வழங்க வேண்டும்" சிபிஎம் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கோரிக்கை
பழனியில் நடைபெற்ற நில மீட்பு மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களுக்குப்பேட்டி அளித்த அவர், கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு, அந்தந்த நிலங்களை சொந்தமாக்கி பட்டா வழங்க வேண்டும் என்றார். வரும் 2024-இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவதற்காகவே ரிமோட் வாக்குப்பதிவை மத்திய அரசு கொண்டு வருகிறதோ என்ற சந்தேகம் உள்ளது என்றும் அவர் கூறினார்.