பாபர் மசூதி வழக்கு - அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி உள்ளிட்ட அனைவரது விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டில் நடந்த சம்பவத்தின்போது திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. ஆதலால், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் 2020 செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.